செய்திகள் :

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி

post image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர்.

மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி இருப்பது சிரமம். என்னைப்போல நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார்.

பிரசாந்த் கிஷோர்
சீமான்

நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம். அண்ணாமலை என்ன செய்கிறார். அவர்களே வீட்டில் வந்து கொடுக்கிறார்களா.

கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே வியூக வகுப்பாளர்கள் செய்கின்றனர், அவர்கள் மக்கள் அரசியலை முன்னெடுப்பதில்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களால் வெல்வது மட்டும் என்றால்... அது வியாபாரம். மக்கள் அரசியல் எப்போது வரும்.

தவெக தலைவர் விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்,

ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கிறார்.

இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் எப்படி தெரியும்.

பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இல்லையா. தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா?

ஜான் ஆரோக்கியசாமி

திருப்பரங்குன்றம், அத்திக்கடவு அவிநாசி பிரச்னை, நொய்யல் பிரச்னை எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா.

திமுகவில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விட பிரசாந்த் கிஷோர் போன்றோர் பெரிய ஆளா. இதை தன்மான இழப்பாக பார்க்கிறேன். ஜான் ஆரோக்கியசாமி எங்களுக்கு வேலை செய்யவில்லை. கட்சி கடந்து எங்களுக்குள் ஒரு உறவு இருந்தது, ஒப்பந்தம் போட்டு சம்பளம் கொடுத்து எல்லாம் வேலை செய்யவில்லை. எங்கள் மீதான அக்கறை காரணமாக ஒரு சில முறை ஆலோசனை மட்டுமே சொல்லியிருக்கின்றார். பாண்டே, ரவீந்திரன் துரைசாமி போன்றவர்களும் எங்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். வெவ்வேறு கட்சியில் இருப்பவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்,

அதெல்லாம் யார் என சொன்னால் பிரச்னையாகிவிடும்." என்றார்.

Vikatan Cartoon Row : `அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!’ - Outlook சிறப்புக் கட்டுரை

விகடன் கார்ட்டூன் விவகாரம் தொடர்பாக பிரபல வாராந்திர ஆங்கில இதழான Outlook கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த சம்பவத்தை விரிவாக அலசியிருக்கிறது. அந்தச் செய்தியின் தமிழாக்கம்...தமிழில் மிகவும்... மேலும் பார்க்க

CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விகடன் இணையதளம் முடக்கம்: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்!* விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட...'' - இரா. மு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க