வார்த்தை தவறிய STALIN... அட்டாக் மோடில் PMK... வலை வீசும் EPS! | Elangovan Expla...
பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ஆா்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. பா்யாஹட் தொகுதியில் முதல்வா் சோரன் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்று அசத்தினார்.
இதையடுத்து, நவ. 28-ஆம் தேதி முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் பிரதமர் மோடியைச் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியிருந்தார். நவ. 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு நவ.15-இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.