பிரபல ஓடிடியில் ஜல்லிக்கட்டு நேரலை!
பொங்கல் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பிரபல ஓடிடி நேரலையில் ஒளிபரப்புகிறது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் பகுதியாக தமிழ்நாட்டின் அடையாளமாக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரலையில் காட்சிப்படுத்தவுள்ளதாக ஜீ5 (ZEE5) ஓடிடி அறிவித்துள்ளது.
ஜன.14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக நேரலை செய்ய உள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 அறிவிப்பு தயார்!
இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என ஜீ5 தெரிவித்துள்ளது.
மேலும், பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜீ5 சிறப்பு ரூ. 49 மாதாந்திர சந்தா பேக்கையும் வழங்குகிறது.