செய்திகள் :

பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; "அருவருப்பானது, தேச விரோதமானது" - கனிமொழி MP கண்டனம்

post image

பாஜகவைச் சேர்ந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள்... பிராமண சமூகம் சமூக நலனுக்காகப் பாடுபட்டுள்ளது. எனவே, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும்" எனப் பேசியிருந்ததற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்வினைகள் தோன்றின.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி முதல்வர் ரேகா குப்தா

அந்தவகையில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, "சாதி அமைப்பைப் போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட சாதியின் செயற்கையாக உருவாக்கப்பட்ட 'பெருமையை' உயர்த்துவதும் இந்த நாட்டின் சாபக்கேடு.

சாதியின் பெயரால் பலர் கொல்லப்பட்ட பிறகும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும், முதலமைச்சரும் அதைப் புகழ்ந்து பேசுவது அருவருப்பானது, வெட்கக்கேடானது மற்றும் தேச விரோதமானது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

பெரியார் தனது வாழ்நாளில் அழிக்கப் போராடிய அதே அடக்குமுறை கட்டமைப்பைத்தான் பாஜக வேண்டுமென்றே ஆழப்படுத்தி வருகிறது.

சமீபத்தில், தமிழக ஆளுநர் கூட தமிழ்நாடு ஏன் போராடுகிறது என்று கேட்டார். அவர் நாம் ஒருபோதும் போராடுவதை நிறுத்தப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? "திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்" - அண்ணாமலை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த... மேலும் பார்க்க

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" - பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் க... மேலும் பார்க்க

"இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?" - இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?

இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதே... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க