செய்திகள் :

பிரேமம் பட இயக்குநரின் கைவண்ணத்தில் ரெட்ரோ டிரைலர்!

post image

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்.18) மாலை வெளியாகவிருக்கிறது.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருப்பதகாவும் கூறப்படுகிறது.

நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார்.

கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்நிலையில், டிரைலரை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந... மேலும் பார்க்க

தில்லி முஸ்தபாஃபாத்தில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது - புகைப்படங்கள்

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொ... மேலும் பார்க்க

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ர... மேலும் பார்க்க