செய்திகள் :

பிரேமலு - 2 கைவிடப்படுகிறதா?

post image

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்னும் துவங்காமல் இருக்கின்றன.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்தாண்டு பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

இயக்குநர் கிரிஷ் ஏடி உள்பட அதே படக்குழுவினர் இணைவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் இன்னும் துவங்காமல் இருக்கின்றன.

பிரேமலு படத்தைத் தொடர்ந்து நஸ்லன் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.

இந்த நிலையில், இயக்குநர் கிரிஷ் ஏடி பிரேமலு - 2 படத்திற்கான கதையை நஸ்லனிடம் சொன்னதாகவும் நஸ்லனுக்கு கதை பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, கிரிஷ் ஏடி நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். நஸ்லனும் வேறு படத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்படம் கைவிடப்படும் வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: அதர்வாவின் டிஎன்ஏ டிரைலர்!

கூலி - ஹிந்தியில் வேறு பெயர்! ஏன்?

ஹிந்தியில் கூலி திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந... மேலும் பார்க்க

மன்னிப்புக் கேட்கிறேன்: மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன். 5 அன்று வெள... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் படப்பிடிப்பு நிறைவு!

சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஃப்ரீடம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ... மேலும் பார்க்க

ஸ்விடோலினா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி!

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். முதல் சுற்றில், போட்டித்தரவரிசைய... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 371!

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ஸையும் அபாரமாக விளையாடிய இந்தியா, 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் சதம் விளாசி ஸ்கோரை பலப்படுத்தினா். இங்கிலாந்துக... மேலும் பார்க்க

முதல் இந்தியராக ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தாா்.அடுத்து, ஒரே டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்தியா்கள் வரிசையில் 7-... மேலும் பார்க்க