செய்திகள் :

பிளக்ஸ் பேனர் வேண்டாம்..! விஜய் பிரசார பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

post image

விஜய் பிரசார பயணத்துக்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நாளை சுற்றுப்பயணத்தைத் துவங்கிறார். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் விஜய் நாளை திருச்சியில் இருந்து தொடங்கவிருக்கிறார்.

மக்களைச் சந்திக்கும் விஜய், திறந்த வெளி வாகனத்தில் பேசவிருப்பதால், அவரின் சுற்றுப்பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் வெற்றித் தலைவர் விஜய், நாளை (செப்.13) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர் இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்.

ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர் தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

2. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

3. நம் கழகத் தலைவர் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போதும், தலைவர் வருகை உள்ளிட்டவற்றின் போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

4. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

5. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

6. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

7. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

10. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும். மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No more flex banners..! Vijay campaign travel guidelines released!

இதையும் படிக்க :உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக இலச்சினை வெளியீடு!

நேபாளத்திலிருந்து தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவிமைய எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும... மேலும் பார்க்க

நேபாளத்தில் தமிழர்களை மீட்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழ்ந... மேலும் பார்க்க

மாணவர் மட்டும்! போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்த பதிவில் அவர் கூறியதாவது,சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரை... மேலும் பார்க்க

சுரங்கத் திட்டங்கள் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சுரங்கத் திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்க தேவையில்லை என்ற முடிவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில், இந்திய அரசின் சு... மேலும் பார்க்க

தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்

தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

நெல்லை: வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு நீதி, கிராம மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அடிப்படை வசத... மேலும் பார்க்க