புகைப்பிடித்தல் காட்சியால் சர்ச்சை: ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை?
ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை சினிமா காட்சிகளில் பயன்படுத்தியதற்காக நடிகர் ரன்பீர் கபூர், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மும்பை காவல் துறைக்கு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ஒரு திரைத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றிருந்த இ-சிகரெட் காட்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.