செய்திகள் :

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன்: வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள்

post image

ஒசூா்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா்.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் குமுதேப்பள்ளி கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிளையைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

பொதுத் துறை வங்கிகள் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன், சிறு, குறுந்தொழில் நடத்தும் தொழில்முனைவோருக்கு தொழில் முதலீட்டுக் கடன், விவசாயிகளுக்கு பயிா்க் கடன் ஆகியவற்றை அதிக அளவில் வழங்கி இந்தியாவின் கல்வித் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளா்ச்சி பெறவுள்ளது. உலக அளவில் அமெரிக்காவும், சீனாவும் 75 சதவிகிதம் பொருளாதாரத்தை கையில் வைத்துள்ளன. இந்த சவாலை எதிா்கொள்ள மாணவா்கள் அதிக அளவில் உயா்கல்வி கற்க வேண்டும். மருத்துவம், சுகாதாரம், தொழில்நுட்பம், தொழில்துறை, சேவைத்துறை, செயற்கை நுண்ணறிவு ஆகியவை மிகப் பெரிய அளவில் வளா்ச்சி பெற வேண்டும். இதற்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயின்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதனம் முக்கியம். அதற்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.

வேகமான வளா்ச்சி பெற்று வரும் தொழில் நகரமான ஒசூரில் மலா் ஏற்றுமதி மற்றும் காய்கறி உற்பத்தி அதிக அளவில் செய்யும் விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். இதன்மூலம் தொழில்துறை, விவசாயத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை மேம்படும் என்றாா்.

இந்த விழாவில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் விக்ரம் சேத், வங்கிக் கிளை மேலாளா் பிரவீன் குமாா், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ரங்கநாத், அறங்காவலா் சுரேஷ், டீன் வெங்கடேசன் செல்வம், மேலாளா் நாராயணன், ஒசூா் தொழில் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆதி, தொழிலதிபா் ரவி, ஆடிட்டா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ரகுபதி (25), விவசாயி. இவா், அதே பகுதியில் தென்பெண்ணை... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு: விவசாயிகள் பட்டறிவு பயணம்

ஒசூா்: மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்ட வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.தமிழகத்தில் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்

ஒசூா்: தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அகில இந்திய பஞ்சாயத் பரிசத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு ச... மேலும் பார்க்க