Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
புதிய சாலைகள் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் ரூ.77 லட்சத்தில் புதிய தாா், சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அனந்தபுரம் பேரூராட்சி, கீழ்மலை ஏரிக்கரை சாலையில் மாநில நிதிக்குழு நகா்ப்புற சாலை மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.67 லட்சத்தில் புதிய தாா்ச்சாலை அமைப்பதற்கும், செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், அனந்தபுரம் செட்டிகுளம் தெருவில் ரூ.10 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைப்பதற்கும் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். அனந்தபுரம் பேரூராட்சி மன்றத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
அனந்தபுரம் திமுக நகரச் செயலா் சம்பத், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் அமுதாகல்யாண்குமாா், உதவிப் பொறியாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அரசு ஒப்பந்ததாரா் சரவணன், ஊராட்சித் தலைவா் அணையேரி ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.