ஓப்பனிங்கில் அசத்தும் கே.எல்.ராகுல்! தனது இடத்தை விட்டுக்கொடுப்பாரா ரோஹித் சர்மா...
புதிய புயலுக்கு என்ன பெயர்?
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாள்களில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும். புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுவது தொடர்பாக உறுதியாகக் கூற முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வழக்கம்போல் வங்கக் கடலில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவிவரும் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவானதும் இதற்கு "ஃபெங்கல்" என்று பெயரிடப்பட உள்ளது.
ஃபெங்கல் என்ற பெயர் சௌதி அரேபியா பரிந்துரைத்த பெயராகும்.