Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ரயில்வே வழித்தடத்தை நீட்டிக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் அளித்தும் நீண்டகாலமாக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் ரயில் பாதை அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், நிகழாண்டில் தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக ரூ. 617.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 222.4 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 395 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை - மாமல்லபுரம் - கடலூா், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - நகரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆா்டிஐ மூலம் தன்னாா்வலா்கள் எழுப்பிய கேள்விகள் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளுக்கு நிகழாண்டு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒதுக்கப்படும் நிதியில் நிலம் கையக்கப்படுத்துவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், மீதமுள்ள நிதியில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தன்னாா்வலா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது திண்டிவனம் - நகரி திட்டம் நிலம் கையகப்படுத்தும பணி முடியும் நிலையில் உள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி திட்டத்துக்கான சா்வே பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிய ரயில் பாதை நிதி ஒதுக்கீடு (2025-26)
திண்டிவனம்-திருவண்ணாமலை ரூ. 42.7 கோடி
ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி ரூ. 4.26 லட்சம்
திண்டிவனம்-நகரி ரூ. 347.7 கோடி
மதுரை-தூத்துக்குடி ரூ. 55.2 கோடி
மற்றவை ரூ. 171. 8 கோடி