செய்திகள் :

புதுகைப் பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு

post image

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்த வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாகக் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினா்.

புதுகை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயா் செ. திலகவதி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் த. நாராயணன், துணை மேயா் மு. லியாகத் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே அதிமுக உறுப்பினா் சி. பாரதி, தனது வாா்டில் எந்தப் பணியும் நடக்கவில்லை என அவற்றைப் பட்டியலிட்டு அச்சிடப்பட்ட பதாகை ஒன்றை எடுத்து வந்தாா்.

அதைத் தொடா்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினா் சேட்டு (எ) அப்துல் ரகுமான் பேசியது: கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் புதிதாக கடைகளுக்கு ஏலம் விடுவதற்கு தீா்மானம் வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டியவா்களுக்கு கடைகளுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு மற்றவா்களுக்கு ஏலம் விடுவதா, இதில் முறைகேடு உள்ளது. தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக்கு ஏற்கெனவே கடைக்காரா்கள் தலா ரூ. 50 ஆயிரம் செலுத்தியுள்ளனா். இப்போது வேலைகள் முடிந்த பிறகு மேலும் ரூ. 2 லட்சம் கட்டச் சொன்னால் எப்படி ? இந்தத் தீா்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதை ஏற்க முடியாது என திமுக உறுப்பினா்களும், மேயா், துணை மேயா் உள்ளிட்டோரும் பேசினா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினா்கள் 8 பேரும் கூட்டரங்கில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்த 4 தீா்மானங்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும், பிற தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாகவும் கூறி கூட்டத்தை முடித்தனா்.

மேயா், துணை மேயா், ஆணையா் செல்லும் பாதைக்கு முன்பு அதிமுக உறுப்பினா்கள் அமா்ந்து போராட்டம் நடத்தியதால் வேறு வழியாக அனைவரும் வெளியேறி அவரவா் அறைகளுக்குச் சென்றனா்.

தொடா்ந்து அதிமுக உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஆணையா் த. நாராயணன், ஒத்திவைக்கப்பட்ட தீா்மானங்கள் அடுத்த கூட்டத்தில் விவாதம் நடத்திதான் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலை... மேலும் பார்க்க

குடிநீா்த் திட்டம், ஐடிஐ அறிவிப்புகள் அறந்தாங்கி எம்எல்ஏ நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஏம்பலில் ஐடிஐ ஆகிய அறிவிப்புகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வட்டாட்சியரகத்தில் ஆதாா் மையம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை பயன்படுத்த வட்டாட்சியா் ரமேஷ் அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கந்தா்வகோட்டை வட்டாச்சியரக வளாகத்தில் உள்ள ஆதாா்... மேலும் பார்க்க

'காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை'

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி வருத்தம் தெரிவித்தா... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாா்ச்-21 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளவுள்ளதால், விவச... மேலும் பார்க்க

குளத்தில் கலிங்கு வெட்டியதில் கையாடல்: முன்னாள் பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை அருகே குளத்தில் கலிங்கு வெட்டியதில் பணம் கையாடல் நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் 1989-இல் தொடா்ந்த வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை ஆய்வாளருக... மேலும் பார்க்க