புதுகை மாநகரில் பேருந்து போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்துகள், கலைஞா் கருணாநிதி மகளிா் கல்லூரி, பிஎல்ஏ ரவுண்டானா, பால்பண்ணை, சங்கரமடம் சாலை, வடக்கு 4ஆம் வீதி வழியாக தஞ்சை சாலையை அடைய வேண்டும்.
தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், வடக்கு 3ஆம் வீதி, திலகா் திடல், பால்பண்ணை, பிஎல்ஏ ரவுண்டானா, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும்.
ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம், பேராங்குளம் வழியாகச் செல்ல வேண்டும்.
நகரில் தீபாவளி நெரிசலைக் குறைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.