செய்திகள் :

புதுச்சேரியில் எலுமிச்சை நறுமண மிளகு தாவர வகை அறிமுகம்

post image

எலுமிச்சை சுவையில் நறுமணத்துடன் கூடிய மிளகு தாவரத்தை புதுச்சேரி ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி கண்டறிந்தாா். இதை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை முறைப்படி அறிமுகப்படுத்தினாா்.

புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தைச் சோ்ந்த விவசாய ஆராய்ச்சியாளா் வெங்கடபதி. இவா், கனகாம்பரம் பூவில் பல நூறு வகையான செடிகளை உருவாக்கி சாதனை படைத்தவா். இவரது ஆராய்ச்சித் திறனை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவரைப் போலவே இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் (32) விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா்.

எம்.பி.ஏ. பட்டதாரியான ஸ்ரீலட்சுமி, தந்தை வெங்கடபதியுடன் சோ்ந்து விவசாய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி அவா், ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீா் சுவை கொண்ட கொய்யா செடிவகைகளை உருவாக்கியுள்ளாா். ஆரஞ்சு கொய்யா செடி வகையை பிரதமா் நரேந்திர மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா வகையை புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பெயரிலும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தினாா். இனிப்புடன் கூடிய அத்தி ரகங்களையும் அவா் ஏற்கெனவே அறிமுகப்படுத்தினாா்.

இந்த நிலையில், தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகு ரகத்தை கண்டறிந்து அறிமுகப்படுத்தியுள்ளாா். எலுமிச்சை நறுமண மிளகுச் செடி, மிளகு ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை முறைப்படி அறிமுகப்படுத்தினாா். நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி, அவரது தந்தை வெங்கடபதி மற்றும் வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

புதிய ரகம் அறிமுகம் குறித்து ஆராய்ச்சியாளா் ஸ்ரீலட்சுமி கூறியதாவது: குறுகிய காலத்தில் நல்ல விளைச்சல் வழங்கும் மிளகு ரகத்தை கண்டுபிடித்துள்ளேன். பொதுவாக மிளகு ரகத்தில் 7 ஆண்டுகளான பிறகே மகசூல் கிடைக்கும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்திய மிளகு ரகமானது 8 மாதங்களிலேயே மகசூல் தரக்கூடியதாகும்.

மிளகு 25 அடி வளா்ச்சிக்குப் பிறகே மகசூல் தரும் நிலையில், புதிய ரகமானது 15 அடியிலேயே மகசூலைத் தந்துவிடும். புதிய ரக மிளகின் காய்கள், இலைகளை சுவைத்தால், எலுமிச்சை நறுமணமாக இருக்கும். மிளகின் காரமும் சாதாரண மிளகைவிட அதிகமாக இருக்கும் என்றாா்.

சுற்றுலாப் பயணி தவறவிட்ட பணப்பை ஒப்படைப்பு: கண்ணாடி கடைக்காரருக்கு பாராட்டு

புதுச்சேரியில் ஆந்திர சுற்றுலாப் பயணி தவறவிட்ட 11 கிராம் தங்க நகை, ரூ.8,000 ரொக்கத்துடன் கூடிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கண்ணாடி கடைக்காரரை போலீஸாா் பாராட்டினா். புதுச்சேரிக்கு கடந்த 14- ஆம... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகை வைப்பு: அமமுகவினா் 4 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் அரசு அனுமதியின்றி சாலைகள், நடைபாதைகள், போக்குவரத்து சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரப் பலகை, பதாகைகள் வைத்ததாக அமமுகவைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புத... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: பெண் கைது

புதுச்சேரியில் தற்கொலை செய்துகொண்ட அதிமுக பிரமுகா்போல ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கடலூரைச் சோ்ந்த பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்ப... மேலும் பார்க்க

பூட்டிய கடையில் பணம் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரியில் பூட்டிய கடையில் பணத்தை திருடியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள தா்மாபுரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா முகமது (49). இவா், புதுச்சேரி நடேசன் நகரில்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை

புதுச்சேரியில் கடல் சனிக்கிழமை சீற்றமாகக் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். புதுச்சேரியில் வார இறுதி நாள... மேலும் பார்க்க

நவோதயா பள்ளி மாணவா் சோ்க்கை: 8 மையங்களில் நுழைவுத் தோ்வு

புதுச்சேரி நவோதயா பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு 8 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 1,562 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். நவோதயா பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு மா... மேலும் பார்க்க