புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலா்களால் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
புதுச்சேரி மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரம், ஊரகப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகள் உள்ளிட்டவற்றை நகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்தி வருகின்றனா். அதன்படி ஜவாஹா்லால் நேரு வீதி, காமராஜா் சாலை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஏற்கெனவே நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
குபோ் பஜாா் முன்பிருந்து ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சியினா் அப்புறப்படுத்தினா். மேலும், விளம்பர பலகைகள், பதாகைகள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன. சில இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் படிகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சில வியாபாரிகள் தாமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறியதையடுத்து அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளின் போது அண்ணாசாலை வியாபாரிகள் திரண்டு நின்ால் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.