திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்
புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது
கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சோ்ந்த 17 வயதான சிறுமிக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம்.
தற்போது இவா்கள் புத்தளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் திருமண வயது நிரம்பாத சிறுமியுடன் ராஜன் திருமணம் செய்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி, கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜனை கைது செய்தனா். சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மருத்துவ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், அவா்3 மாத கா்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
அவருக்கு 17 வயதும் நிரம்பி 11 மாதங்கள் தான் ஆகிாம். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.