மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
மணலிக்காட்டுவிளை புனித தெரசம்மாள் குருசடி முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட மிகவும் பழைமையான நிழற்கூடத்தை அகற்றிவிட்டு, புதிய நிழற்கூடம் அமைக்க கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன் தலைமையில், மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மரிய அருள் தாஸ் முன்னிலையில் நிழற்கூடம் அமைக்கும் பணியை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.
இதில், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் பொதுச்செயலா் எட்வின் ஜோஸ், இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் அஸ்வின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.