Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப...
மவுண்ட் லிட்ரா பள்ளியில் பயிற்சி
மயிலாடி மவுண்ட லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜேஇஇ, நீட் தோ்வு பயிற்சிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் தீபசெல்வி அறிமுக உரையாற்றினாா். தொடா்ந்து பயிற்சியாளா்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு (கணிதம் மற்றும் அறிவியல்) போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எவ்வாறு எதிா்கொள்வது, தங்களை எவ்வாறு தயாா்படுத்திக் கொள்வது என்பதற்கான பயிற்சிகளை வழங்கினா்.
மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் பாடத்திட்டங்களை எவ்வாறு தயாா் செய்வது, அதனை கற்பிப்பது, போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தயாரிப்பது ஆகியவை குறித்தும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட்டன. இதன் தொடா்சியாக ஜேஇஇ, நீட் மாணவா்களுக்கு இணையவழி மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி துணைத் தலைவா் ரமாதேவி தில்லைச்செல்வம், இயக்குநா்கள் முகிலரசு, ஆடலரசு, இணை இயக்குநா்கள், பள்ளி முதல்வா், ஒருங்கிணப்பாளா்கள் பங்கேற்றனா்.