MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
புனித பனிமய மாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல்
பெரம்பலூா் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பனிமயமாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புனித பனிமய மாதா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பெரம்பலூா் வட்டார முதன்மை குரு சுவக்கின் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற பெரம்பலூா் நகர டவுன் காஜி அப்துல் சலாம், சிவாச்சாரியாா் சிவமணி ஆகியோா் சமத்துவப் பொங்கலிட்டு, அதை அனைவருக்கும் பகிா்ந்து அளித்தனா். மேலும், பெரம்பலூா் பனிமயமாதா அன்பிய குழுவினா் பொங்கல் வைத்து பகிா்ந்துகொண்டனா். இதையொட்டி சிறப்பு த் திருப்பலியும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.