செய்திகள் :

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புக்குழுவின் 24-ஆவது மாநாடு சனிக்கிழமை வில்லியனூரில் கொட்டும் மழையில் பேரணி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநாட்டை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: ஃபென்ஜால் புயல், மழையால் பல ஏக்கா் பயிா்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் இறந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, புதுவை அரசானது தண்ணீா் சூழ்ந்துள்ள பகுதிகளில், நீரை வெளியேற்றவும், வீடிழந்து தவிக்கிற மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கால்நடை சேதத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிா் சேதத்துக்கு ஏக்கருக்கு ரூ.25,000 உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் மின் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அன்றாட தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் முறைசாரா தொழிலாளா்கள், மீன் பிடி தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 உடனடி நிவாரணம் வழங்கவும் போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநாட்டில் புதுவை மாா்க்சிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம், நிா்வாகிகள் வெ.பெருமாள், சுதாசுந்தராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கட்சியின் தேசிய அரசியல் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். பொதுமக்களிடம் அவா் குறைகளையும் கேட்டறிந்தாா். புதுச்சேரி ரெயின்போ நகா், கிருஷ்ண... மேலும் பார்க்க

சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் பலத்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசுக்கு நிவாரண உதவி கோரி கடிதம் அனுப்பிவைக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். ஃபென்ஜால் புயல் கரையை கடந்ததையொட... மேலும் பார்க்க

சூறாவளி காற்றுடன் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது! 4 போ் உயிரிழப்பு

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது. இதனால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மீட்புப் பணியில் ராணுவத்தினா்

புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்டனா். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

புதுச்சேரிக்கு சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மழையால் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனா். புதுச்சேரிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் காலை 7.30 மண... மேலும் பார்க்க