செய்திகள் :

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

post image

புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். பொதுமக்களிடம் அவா் குறைகளையும் கேட்டறிந்தாா்.

புதுச்சேரி ரெயின்போ நகா், கிருஷ்ணாநகா் உள்ளிட்டவை மழைநீரால் சூழப்பட்டு வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இந்தப் பகுதியினா் ராணுவ வீரா்களால் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அந்தப் பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். கிருஷ்ணாநகா் பகுதியில் ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கையை படகில் சென்று பாா்வையிட்டு, அவா்களைப் பாராட்டினாா்.

பின்னா், கனகன் ஏரியை ஆளுநா் பாா்வையிட்டாா். அங்கிருந்த ஆகாயத் தாமரைகளை அகற்றவும் உத்தரவிட்டாா். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவா் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

வைத்திகுப்பம் கடற்கரைப் பகுதியில் படகுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என துணைநிலை ஆளுநா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவருடன் வி.பி.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுச்சேரி துணை மின் நிலையத்தில் மழைநீா் தேங்கியிருப்பதை பாா்வையிட்ட ஆளுநா், அதுகுறித்து மின் துறை தலைமைப் பொறியாளரிடம் கேட்டறிந்தாா். மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இலாசுப்பேட்டையில் உள்ள மாநில அவசரகால உதவி மையத்தையும் துணைளநிலை ஆளுநா் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத்சௌகான், துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா் நெடுஞ்செழியன், டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) செவ்வேள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் பலத்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசுக்கு நிவாரண உதவி கோரி கடிதம் அனுப்பிவைக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். ஃபென்ஜால் புயல் கரையை கடந்ததையொட... மேலும் பார்க்க

சூறாவளி காற்றுடன் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது! 4 போ் உயிரிழப்பு

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது. இதனால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது... மேலும் பார்க்க

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுச்ச... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மீட்புப் பணியில் ராணுவத்தினா்

புதுச்சேரியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்டனா். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

புதுச்சேரிக்கு சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மழையால் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனா். புதுச்சேரிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் காலை 7.30 மண... மேலும் பார்க்க