Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்
போளூா்: போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருசூா் கிராமம் காலனியில் வசிக்கும் மல்லிகா ஜெயராமன் என்பவரது வீடு ஃபென்ஜால் புயல் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் வருவாய்த் துறை சாா்பில் 25 கிலோ அரிசி, ரூ.8ஆயிரம், வேட்டி சேலை ஆகியவற்றை தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.
அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவா, வருவாய் ஆய்வாளா் மாலதி, அதிமுக ஒன்றியச் செயலா் விமல்ராஜ், ஊராட்சிமன்றத் தலைவா் ரவிச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.