செய்திகள் :

புயல் சின்னம் எப்போது எங்கே கரையை கடக்கலாம்?

post image

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கி மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் எங்கே? எப்போது? கரையைக் கடக்கும் என்று இதுவரை துல்லியமாகக் கணிக்கப்படவில்லை.

நவ. 29ஆம் தேதிவரை, இந்த புயல் சின்னமானது கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மழை தொடர்பான தகவல்களை கணித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துவரும் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் இன்று புயல் சின்னம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கி மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம்.

இதனால், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னைக்கு மிகச் சிறப்பான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் சின்னமானது கரையைக் கடக்கும்வரை தெற்கு சென்னைக்கு மழை வாய்ப்பு உள்ளது. சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எல்லாம் மழை கிடைக்கும். இது மழை தொடர்பான தற்காலிக கணிப்புதான்.

27ஆம் தேதி - சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். - புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரும்.

28ஆம் தேதி - சென்னையில் நாளை மிதமான மழை பெய்யும். - புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரும்.

29ஆம் தேதி - சென்னைக்கு கனமழை கிடைக்கும் - மேற்கு நோக்கி புயல் சின்னம் நகரும்.

30ஆம் தேதி - சென்னைக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யும் - மேற்கு நோக்கி புயல் சின்னம் நகரும்.

டிச. 1ஆம் தேதி - சென்னைக்கு மிதமான மழை - காற்றின் இழுவையின் விளைவாக

டிச.2ஆம் தேதி - சென்னைக்கு மிதமான மழை - காற்றின் இழுவையின் விளைவாக

புயல் சின்னமான கரையைக் கடந்துவிட்டால், உள்ளூர் மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கொங்கு மண்டலங்களும் மிகச் சிறப்பான மழையைப் பெறும்.

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்!

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அருகே கார் மோதியதில் 5 பெண்கள் பலி

செங்கல்பட்டு அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து பெண்கள் பலியாகினர். மேலும் பார்க்க

மக்களே உஷார்: 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ம... மேலும் பார்க்க

சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம்: 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை... மேலும் பார்க்க

ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஆடு வெட்டி பூஜை.. அதிர்ச்சி தரும் காரணம்!

சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி, ஆடு வெட்டி முப்பூசை செய்து காவல்துறையினர் வழிபாடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சேலம் மாவட்டம் ஆ... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை, கடலூர், நாகையில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் நவ. 29ஆம் தேதி கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென... மேலும் பார்க்க