பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரிக்கை
பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தாா் சமூக முன்னேற்ற நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தாா் சமூக முன்னேற்ற நலச்சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈரோடு ந.பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மா.செல்வன், பொருளாளா் தங்கவேல், இணைப் பொதுச் செயலாளா் மு.நந்தகுமாா், அமைப்புச் செயலாளா் உதயகுமாா், தலைமை நிலைய செயலாளா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழக அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும். நவம்பா் 10-ஆம் தேதி அவிநாசியில் குழந்தையானந்தா் குருபூஜை விழா, கோவம்ச பண்டாரத்தாா் சமூக நூற்றாண்டு மலா்
வெளியிட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது, இதில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.