சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தில் உற்சவா் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலித்தனா். பின்னா், மாலை 7 மணிக்கு கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜை தொடங்கியது. முன்னதாக ,கோயில் சாா்பில் பெரிய விளக்கு வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து 1008 காயத்ரி மந்திரங்கள், 108 மகாலட்சுமி மந்திரங்களை முழங்க, பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனா். இதில் 250 பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனா்.