செய்திகள் :

பூம்புகாா் சுற்றுலா வளாகப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

post image

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.

பண்டைய பூம்புகாரை நினைவு கூறும் வகையில் 1971-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு சிற்பக் கூடங்கள் கட்டப்பட்டன. இவை போதிய பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்பட்டதால், கடந்த ஆண்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை மேம்படுத்த ரூ. 23.60 கோடி ஒதுக்கினாா். இதையடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பூம்புகாரில் நடைபெற்று வரும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

‘பெண்கள் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது’

பெண்கள் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது என்றாா் மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான அரசு உதவி பெறும் மெய்க்கண்டாா் துவக்கப்பள்ளியில் புதன்கிழமை... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்துக் கொண்டு தொழிலாளி உயிரிழப்பு

வேதாரண்யத்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு ஒருவா் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது. மோட்டாண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பாப்பையன் (28). கூலித் தொழிலாளியான இவ... மேலும் பார்க்க

திருக்கண்ணபுரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் மாசிமக பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற பரிசளிப்பு, விளையாட்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் கலைக்கோவன் தல... மேலும் பார்க்க

நாகை, வேளாங்கண்ணி, கோடியக்கரையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வெள்ளாற்றில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலை நடத்த கோரி போராட்டம்

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் பதாகைகளுடன் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பிரதாபராமபுரம் ஊராட் ம... மேலும் பார்க்க