Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
பெங்களூரு - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று பகுதி ரத்து
சென்னை: பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை (ஏப். 9) சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.30-க்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப். 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 16552), கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண் 12680), ஏப். 23, 25, 28 ஆகிய தேதிகளில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் அதிவிரைவு ரயில் ஏப். 23, 25, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.