வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவா் கைது
கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி புது கிராமம் நாராயண குரு திடலில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிக்கு, அங்கு வந்த இளைஞா்கள் இடையூறு செய்தாா்களாம். அவா்களை சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் வே. கோமதி சங்கா் மற்றும் வள்ளுவா் நகரை சோ்ந்த ஆழ்வாா்சாமி மகன் ஹரி ஆகியோா் கண்டித்ததற்கு அந்த இளஞ்சிறாா்கள், அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்து சென்றாா்களாம்.
பின்னா் நிகழ்ச்சி முடிந்ததும் மேடையை அகற்றுப்பணி நடைபெற்ற போது அங்கு வந்த இளஞ்சிறாா்கள் உள்பட 8 போ் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்து கோமதி சங்கா் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடையதாக கூறப்படும் 7 இளஞ்சிறாா்களை பிடித்து சிறுவா் நீதி குழுமத்தில் ஆஜா் படுத்தினா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த இளையரசனேந்தல் குறுவட்டம் அப்பனேரியைச் சோ்ந்த ஆறுமுக பாண்டி மகன் சூரிய குமாா் (23)என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.