பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
பெண்களிடம் குறைகளை கேட்ட டிஐஜி
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மக்கள் மன்றத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்திய சுந்தரம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.
புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இது மக்கள் மன்றம் எனும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மனுக்கள் பெறும் மக்கள் மன்றம் நடைபெற்றது.
இதில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்று பெண்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
வில்லியனூா் மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மனுக்களைப் பெற்றாா்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு புகாா்களை சனிக்கிழமை மகளிா் போலீஸாா் பெற்று வழக்குப்பதிந்தனா்.
மேலும், பொதுமக்கள் தவறவிட்ட 18 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 163 கைப்பேசிகள் பிப்ரவரியில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது 178 கைப்பேசிகள் முடக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கேக் வெட்டி கொண்டாட்டம்: புதுச்சேரி தலைமைத் தபால் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் இணைந்து சா்வதேச மகளிா் தினத்தை சனிக்கிழமை கேக் வெட்டிகொண்டாடினா். அவா்களுக்கு உயா் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.