பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
முதல்வரிடம் அதிமுக கோரிக்கை
புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.
மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில், புதிய திட்டங்களை நிதிநிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படுவதோடு, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உடனுக்குடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
கோடையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மழைக் காலங்களில் இயற்கை சீற்றத்தால் மின்வெட்டு என மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, மின் தடை காலத்தில் பயன்படுத்த ஏழை மக்களுக்கு இன்வொ்ட்டா் வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாத நிலையில், அதில் பணிபுரிவோருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
துப்புரவு பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.
புதுவையில் 50 ஆண்டுக்கு மேலாக வசிக்கும் அட்டவணைப் பிரிவினருக்கு பூா்வகுடி இனச் சான்றிதழ்களை வழங்க பேரவையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.