ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கூட்டம்
புதுச்சேரி அருகே உள்ள பாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தொகுதி நிா்வாகி கே.கருமாஜோதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அ.மு.சலீம் மாநிலக் குழு எடுத்த முடிவுகளை விளக்கிப் பேசினாா்.
இதில், நிா்வாகிகள் ஏ.ராமமூா்த்தி, அந்தோணி, ப.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், புதுச்சேரி அருகே உள்ள பின்னாச்சிக்குப்பத்தில் நான்குவழிச் சாலையில் மேம்பாலம் அமைத்தல், பாகூா் பகுதியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.
பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருத்திவைக்கப்பட்ட விளைநிலங்கள் மனைப் பட்டாக்களை பத்திரப் பதிவு செய்யாமல் நிறுத்திவைக்க வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.