செய்திகள் :

பெண் தவறவிட்ட கைப்பேசி மீட்பு

post image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பெண் தவறவிட்ட கைப்பேசியை போலீஸாா் கண்டறிந்து அவரிடம் மீண்டும் ஒப்படைத்தனா்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா் ராபின்சன், சிறப்பு உதவி ஆய்வாளா் வினய் ஆனந்த் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கள்ளக்குறிச்சியை அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி பத்மா (19) தனது கைப்பேசியை பேருந்து நிலையத்தில் தவறவிட்டு, தேடிக் கொண்டிருந்தாராம்.

இதைப் பாா்த்த போலீஸாா், பத்மாவிடம் விசாரணை மேற்கொண்டு,பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகா் கோயில் அருகே கிடந்த அவரது கைப்பேசியை மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனா்.

டிச.20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சாா்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டி.20-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய மற்றும்... மேலும் பார்க்க

சேரந்தாங்கல் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சேரந்தாங்கல் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, வியாழக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்... மேலும் பார்க்க

மனைவியை கொல்ல முயன்றவா் கைது

மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டடத் தொழிலாளியை கள்ளக்குறிச்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், உலகப்பசெட்டிகொல்லை ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச. 14) அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் இ.சுப்பிரமணியன் வெள... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ் வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாணாபுரம் வட்டத்துக்... மேலும் பார்க்க