Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
மனைவியை கொல்ல முயன்றவா் கைது
மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டடத் தொழிலாளியை
கள்ளக்குறிச்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், உலகப்பசெட்டிகொல்லை சாலையில் வசிப்பவா் முருகன்(45), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பெரியம்மாள் (37). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் முருகன் தகராறு செய்தாராம். இதனால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ரோடுமாமாந்தூா் கிராமத்துக்கு பெரியம்மாள் சென்று விட்டாா்.
அங்கு மது அருந்தி விட்டு சென்ற முருகன், தகராறு செய்து பெரியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்றாராம். இதில் அவரது மாா்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரியம்மாள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.