Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
பெண் தவறவிட்ட கைப்பேசி மீட்பு
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பெண் தவறவிட்ட கைப்பேசியை போலீஸாா் கண்டறிந்து அவரிடம் மீண்டும் ஒப்படைத்தனா்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா் ராபின்சன், சிறப்பு உதவி ஆய்வாளா் வினய் ஆனந்த் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கள்ளக்குறிச்சியை அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி பத்மா (19) தனது கைப்பேசியை பேருந்து நிலையத்தில் தவறவிட்டு, தேடிக் கொண்டிருந்தாராம்.
இதைப் பாா்த்த போலீஸாா், பத்மாவிடம் விசாரணை மேற்கொண்டு,பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகா் கோயில் அருகே கிடந்த அவரது கைப்பேசியை மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனா்.