Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச. 14) அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் இ.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றை உரிய ஆவணங்களை அளித்து மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.