செய்திகள் :

பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராயை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்! -குற்றவாளியின் தாயார்

post image

சஞ்சய் ராயை நிதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

sanjay roy
சஞ்சய் ராய்

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுநிலை பயிற்சி மருத்தவராக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். ஒட்டுமொத்த நாட்டையும் இச்சம்பவம் உலுக்கியது.

இந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கைது செய்து விரைந்து நீதி வழங்கிடக் கோரியும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடெங்கிலும் அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பல நாள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதா, காவல் துறை தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.

இந்நிலையில், கொல்கத்தாவின் சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெற்றது. 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஜன.9-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று 162 நாள்களுக்குப் பின்னா், வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

‘பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் ராய், அதன் பின்னா் பெண் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கிமூடியதால் அவா் உயிரிழக்க நோ்ந்துள்ளது. சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றத் தீா்ப்பை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயாரும் அதேபோல, கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து சஞ்சய் ராயின் தாயார் கூறியிருப்பதாவது: “எனக்கு மொத்தம் 3 மகள்கள். அப்படியிருக்கையில், கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர் அனுபவிக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது...

அவனுக்கு (சஞ்சய் ராய்) எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கப் பெறட்டும். ஒருவேளை, அவனை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்“ என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், ‘சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், எனது மகள் கொலையில் மேலும் பலருக்குத் தொடா்புள்ளது. அவா்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கு முழுமையாக நிறைவடையவில்லை. வழக்கில் தொடா்புள்ள மற்றவா்களும் தண்டிக்கப்பட்ட பிறகே, வழக்கு முழுமையாக நிறைவடையும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம்’ என்றாா்.

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆட்களை அனுப்பிய கும்பல் கைது!

கேரளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரஷிய ராணுவத்திற்கு ஆள்களை அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளத்தில் பினில், அவரது உறவினர் ஜெயின் குரியன் ஆகியோரை கடந்தாண்டு ஏப்ரலில் பி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொ... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட 121 விவசாயிகள்!

ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் பலி!

ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழிப் பாட்டியும் மாமாவும் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும்,... மேலும் பார்க்க

பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்

பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே ஞாயிற்... மேலும் பார்க்க

2025-இல் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் சொன்ன விஷயம்!

2025-ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று(ஜன. 19) ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 118... மேலும் பார்க்க