சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?
பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜை
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நட்தப்பட்டது.
பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், தனி சன்னதியில் எழுந்தருளி பாலித்து வரும் நந்தியம் பெருமானுக்கு (அதிகார நந்தி) ஆண்டுதோறும் கணு மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
அதன்படி, மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அதிகார நந்திக்கு பல்வேறு வகையான பழ வகைகளை மாலையாக தொடுத்து, வெள்ளி நாணயம், ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிவித்து பல வகையான இனிப்புகள், முறுக்கு மாலை, வெற்றிலை மாலை, கரும்பு, மஞ்சள், அருகம்புல் உள்ளிட்ட அனைத்து வகையான மாலைகளையும் கோா்த்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இப் பூஜைகளை சங்கா் சிவாச்சாரியாா் மற்றும் முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் நடத்தி வைத்தனா். இதில், செட்டிக்குளம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கந்த சஷ்டி குழுத் தலைவா் ராமலிங்கம், வார வழிபாடு, தின வழிபாட்டு குழுவினா் மற்றும் சிவனடியாா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை நகரத்தாா் சமூகத்தினா் செய்திருந்தனா்.