பெருசு - ப்ரோமோ வெளியீடு!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’. இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவை கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், புதிய ப்ரோமோ விடியோ ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
பெருசு திரைப்படம் மார்ச் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
No matter how hard you hit, it’ll stand tall! #Perusu - 3 days to go
— Stone Bench (@stonebenchers) March 11, 2025
Match abandoned due to…
Releasing Worldwide on March 14#Perusu#PerusufromMar14@actor_vaibhav@sunilreddy22@ilango_ram15@kaarthekeyens#HarmanBaweja#HiranyaPerera#Karunakaran#Munishkanth… pic.twitter.com/pI5wb2NnYi