பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு
பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த சக்திவேல் அண்மையில் பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனா். இதேபோல, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பணிமாறுதலில் சென்று விட்டனா்.
இந்நிலையில், குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், வாரத்துக்கு ஒருநாள் பெருந்துறைக்கு வந்து பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.
இதனால், எல்எல்ஆா் மற்றும் வாகன உரிமம் பெறுவதற்கு பொதுமக்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.