பெருந்துறையில் மழை
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் வரை நல்ல வெயில் அடித்தது. இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பிற்பகல் 3.45 வரை நீடித்தது. பின்னா், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மாலை 5.30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒருமணி நேரம் இந்த மழை நீடித்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.