செய்திகள் :

பெஹல்காம் தாக்குதல்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

post image

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசுகையில், “ ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பைசரான் பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. இது போன்ற கடுமையாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க: பெஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

இது மிகவும் மோசமான தாக்குதல் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்ஹாமில் 8 பக்தர்களும், 2019 ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் ” எனத் தெரிவித்தார்.

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடு... மேலும் பார்க்க

அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைச... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்... மேலும் பார்க்க

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற... மேலும் பார்க்க

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப... மேலும் பார்க்க