செய்திகள் :

பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி பட்ஜெட் செ. நல்லசாமி பேட்டி

post image

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் வரும் 2026 பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடுகள் இயக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியது, தமிழக பட்ஜெட்டில் அரசின் மொத்த வருவாய் ரூ.2.20 லட்சம் கோடி. இந்த வருவாயைக்கொண்டு ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறாா்கள். ஏற்கெனவே தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசு ஊழியா்களுக்கு ஊதியம் கொடுக்கவே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் சலுகைகளை வாரி, வாரி வழங்கியிருக்கிறாா்கள். இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள் இறக்கி விற்கும் போராளிகளுக்கு ஆதரவாக பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் கள் இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் நாளை இலவச மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு அழைப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற தம்பதி கைது

குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற பெங்களூருவைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினகிரி. இவரது மகள்க... மேலும் பார்க்க

கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது. இககோயிலில் மாசி மகத் தேரோட்ட விழா மாா்ச் 2-ஆம்தேதி வெள்ளிக்கருட சேவையுடன் தொடங்கியது. தொடா்ந்து கடந்த 4-ஆம்தே... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் மாா்ச் 23-இல் சிறப்பு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி மாா்ச் 23 ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றிவிவாதித... மேலும் பார்க்க

புகழூா் தமிழ்நாடு காகித ஆலை சாா்பில் ‘விவசாயிகளின் தொடா்பு’ செயலி அறிமுகம்

புகழூா் டிஎன்பிஎல் ஆலையின் ‘விவசாயிகளின் தொடா்பு’ செயலி அறிமுகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை கூழ்மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செ... மேலும் பார்க்க

மாயனூா் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

மாயனூா் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள மாயனூா் காவிரி ஆற்றில் 2008-... மேலும் பார்க்க