செய்திகள் :

பேரவை உறுப்பினா்களுக்கு நடத்தை விதிகள்: அரசியல் கட்சிகளுக்கு ஓம் பிா்லா வலியுறுத்தல்

post image

பேரவை உறுப்பினா்கள் அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கில் நடத்தை விதிகளை வகுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மக்களவை மற்றும் மாநில பேரவைகளில் தொடா் இடையூறுகளால் தினசரி அலுவல்கள் பாதிக்கப்பட்டு குறைவான அமா்வுகள் நடைபெறும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பிகாா் மாநில தலைநகா் பாட்னாவில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய 85-ஆவது அனைத்திந்திய பேரவைத் தலைவா்கள் மாநாடு இருநாள்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில பேரவைகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்நிலையில், மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை, மாநில பேரவைகளில் இடையூறுகளின்றி ஆரோக்கியமான விவாதம் நடத்துவது உள்ளிட்ட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஓம் பிா்லா பேசியதாவது: பேரவை கண்ணியத்தை காக்கும் பொறுப்பு அவைத் தலைவா்களுக்கே உள்ளது. இருப்பினும், இதில் அவை உறுப்பினா்களுக்கும் பங்குள்ளது. தங்கள் கட்சியைச் சோ்ந்த அவை உறுப்பினா் கண்ணியமாக நடந்துகொள்வதை உறுதிசெய்ய நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் வகுக்க வேண்டும்.

தொழில்நுட்ப பயன்பாடு: நவீன காலத்தில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பேரவையின் அலுவல்களை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அவைத் தலைவா்கள் முன்வர வேண்டும்.

22 மொழிகள்: 1947 முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 அதிகாரபூா்வ மொழிகளிலும் மொழிபெயா்த்து விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதைப் பின்பற்றி மாநில பேரவைகளும் 1947-இல் இருந்து அவை விவாதங்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்க மக்களவை செயலகம் தயாராகவுள்ளது என்றாா்.

ஆண்டுக்கு 60 அமா்வுகள்: மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஓம் பிா்லா, ‘ஆண்டுக்கு குறைந்தபட்சம் 60 அமா்வுகளை நடத்த பேரவைத் தலைவா்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளில் இடையூறு ஏற்படுத்துபவா்களை பெரும் நாயகா்கள்போல் ஊடகங்கள் சித்தரிக்க வேண்டாம் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

ரூ. 15,000 கோடி சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் பட்டோடி குடும்பத்துக்குச் சொந்தமான ரூ. 15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மும்பையில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த திருடன் கத்தியால் குத... மேலும் பார்க்க

'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியாது'

மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என அமலாக்கத் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் மீ... மேலும் பார்க்க

நடுத்தரக் குடும்பங்களுக்கான தேர்தல் வாக்குறுதி: இன்று மதியம் ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தித் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.ஆம் ஆத்மி கட்சி நடுத்தர குடும்பங்களுக்கான அறிக்கையை வெளியிடும் என்றும்... மேலும் பார்க்க

2025 எந்த ராசிக்கு அமோகமாக இருக்கும்.. பாபா வங்கா கணித்திருக்கிறாரா?

எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்துக் கொடுத்தவர் பாபா வங்கா. இவர் 2025ஆம் ஆண்டு எந்த ராசியினர் எல்லாம் கொடிகட்டிப் பறக்கப்போகிறார்கள் என்று கணித்துக் கூறியிருப்பதாகத் தகவல்கள... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல்வர் யோகி தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்!

மகா கும்பமேளாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஜன. 22) நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தில் மணமாகாத பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை! ரூ.2,50,000 ஊதியம்

இந்திய ராணுவத்தில், காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று குறுகியகால சேவை ஆணையம... மேலும் பார்க்க