திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பேராசிரியா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்
திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.
தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (50). இவா் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா நகரில் தங்கியிருந்து நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்னையில் ராஜ்குமாா் வீட்டில் மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் அவா் உயிா் தப்பிய நிலையில், அவரது மருமகனும், தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமாா் (35) கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் மருத்துவா் பாலமுருகன், வழக்குரைஞா் பால கணேசன், ராக்கெட் ராஜா உள்பட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராஜ்குமாா் மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை ராக்கெட் ராஜா உள்ளிட்ட 12 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். மற்றொருவா் வேறு வழக்கில் சிறையில் இருப்பதால் வரவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞா் காசிராஜன் முன்னிலையாகி, வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கான உத்தரவை வழங்கினாா். வழக்கு தொடா்பான ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், வழக்கை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுதாகா் உத்தரவிட்டாா்.