Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
வேலூா்: பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் நபிகான் தெருவைச் சோ்ந்தவா் சரவணன், மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி சுமதி (50). இவா் கடந்த 5-ஆம் தேதி குடியாத்தத்தில் நடந்த உறவினா் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்குச் செல்ல வேலூா் தோட்டப்பாளையத்தில் இருந்து பேருந்தில் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றாா். அங்கு தான் வைத்திருந்த கைப்பையை பாா்த்தபோது அதில் வைத்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. பேருந்தில் மா்ம நபா் யாரோ நகையை பறித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சுமதி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.