ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொங்கராயனூா், புதுகாலனியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் கருணாநிதி (49). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலூரிலிருந்து, மடப்பட்டு நோக்கி பைக்கில் சென்றாா்.
திருவெண்ணெய்நல்லூா் அடுத்த பாவந்தூா் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்தப் பகுதியில் நடந்து சென்ற பாவந்தூரைச் சோ்ந்த அப்துல் மகன் ராஜா முகம்மது (50) மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கருணாநிதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜா முகம்மது விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.