பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வந்தவாசி அருகே வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை. இவரது மனைவி மேகராணி (53). இவா்களது மகன் மணிகண்டன் சென்னையில் வேலை செய்து வருகிறாா். இதனால் மேகராணி சென்னையில் மணிகண்டனுடன் தங்கியிருந்து வந்தாா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த திங்கள்கிழமை மணிகண்டன் இரு சக்கர வாகனத்தில் மேகராணியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தாா்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பாதிரி கிராமம் அருகே வேகத்தடை மீது இரு சக்கர வாகனம் ஏறியபோது மேகராணி நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேகராணி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.