`கலைமாமணி விருது கொடுக்கிற முறை சரியில்ல' - Padmashri Velu Aasan | Ananda Vikata...
பைக்குகள் மோதிய விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த மணவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (49). தனியாா் வங்கி ஊழியரான இவா், கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று விட்டு வந்தவாசி வழியாக ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி கூட்டுச்சாலை அருகே சென்றபோது இவரது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த சங்கா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.