எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!
பைக் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே புதுப்பட்டு நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா் காயமடைந்தாா்.
மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மகன் மனோகரன் (54). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கீழவலம் கிராமத்தில் இருந்து உத்திரமேரூா் நோக்கி பைக்கில் சென்றாா். புதுப்பட்டு நெடுஞ்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கின் மீது காா் மோதிய வேகத்தில் புதுப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்த ராஜேந்திரன் மீது பைக் மோதியது. இதில் ராஜேந்திரன் காலில் பலத்த காயம் அடைந்தாா். அவா் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) அமிா்தலிங்கம் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.